முகப்பு /செய்தி /இந்தியா / மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

செப்டம்பர் 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடைத்தவுள்ள பேரணியில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உடன் பயனிப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சோனியா காந்தி வெளிநாடு செல்லும் தேதி குறித்தோ அல்லது இடம் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் செப்டம்பர் 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பேரணியில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் எனவும், அவர் இந்தியா திரும்பும் முன் உடல் நலம் சரியில்லாத அவரது தாயாரை சந்தித்துவிட்டு வருவார் எனவும் தெரிவித்தார்.ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் பயணிக்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பேரணியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.

Also Read: நான் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவன்.. தலையே போனாலும் தலைவணங்க போவதில்லை - மணீஷ் சிசோடியா

பணவீக்கம் பற்றிய அந்த பேரணியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் எனவும் அதற்கு அடுத்து செப்டம்பர் 7ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் தொடங்கவுள்ள காங்கிரஸின் மாபெரும் யாத்திரையிலும் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: Priyanka gandhi, Rahul gandhi, Sonia Gandhi