ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு

சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு

சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு

Sonia Gandhi - காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது உத்தரப் பிரதேச பயணத்தை ரத்து செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி தனது உத்தரப் பிரதேச பயணத்தை ரத்து செய்துள்ளார். ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தல், இடைத் தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் பணிகளுக்கான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய பாதயாத்திரை நிறைவு விழாவில் சோனியா காந்தி நேரில் பங்கேற்றார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பபட்டது. இந்நிலையில், சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அடுத்த வார விசாரணைக்கு அவர் ஆஜராக மாட்டார் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Corona, Sonia Gandhi