தென்னிந்தியாவில் ராகுல் காந்தி போட்டி... எந்த இடம் தெரியுமா?

தமிழகத்தில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.

news18
Updated: March 31, 2019, 12:46 PM IST
தென்னிந்தியாவில் ராகுல் காந்தி போட்டி... எந்த இடம் தெரியுமா?
ராகுல் காந்தி
news18
Updated: March 31, 2019, 12:46 PM IST
மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தென்னிந்தியாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அழைப்புவிடுத்தார். இதேபோல் தமிழகத்தில் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.

இதனால் தென்னிந்தியாவில் ராகுல் காந்தி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Loading...
First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...