கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்கிறார். வரும் ஜனவரி 30ஆம் தேதி பல்வேறு தலைவர்களின் முன்னிலையில் நடைபயணத்தின் நிறைவு விழாவை நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள ராகுல் காந்தி நேற்று ஜம்மு காஷ்மீரின் பனிஹால் பகுதியில் தனது யாத்திரையை மேற்கொண்டார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லாவும் இதில் பங்கேற்றார்.
இந்நிலையில், யாத்திரை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதை ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர். ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என ஜம்மு காஷ்மீர் காவல்துறை விளக்கம் தந்தது.
தொடர்ந்து இன்று ராகுலின் நடைபயணம் மீண்டும் தொடங்கிய நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, ராகுல்காந்தியுடன் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார். இதனிடையே, இந்திய ஒற்றுமை பயணத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மல்லிகார்ஜூன கார்கே அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
30ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன், முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்பதால், அதிகமான தொண்டர்கள் திரள்வார்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார். நாடு ஏற்கனவே இரண்டு பிரதமர்களையும் பல தலைவர்களையும் இழந்துள்ளதாக கூறியுள்ள மல்லிகார்ஜூன கார்கே, தனிப்பட்ட முறையில் இதில் தலையிட்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Jammu and Kashmir, Mallikarjun Kharge, Rahul gandhi