முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்.. அப்டோபர் 17ல் தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்.. அப்டோபர் 17ல் தேர்தல்

 காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியிலிருந்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், 2014, 2019 என தொடர்ந்து இரு நாடாளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியைத் தழுவியது. 2014- ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற 49 தேர்தல்களில் 39-ல் தோல்வியை கண்டுள்ளது. இதனை தொடர்ந்து கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு பகிரங்க கடிதம் எழுதினர். கட்சிக்கு முழு நேர தலைவரை விரைவாக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதிருப்தி காரணமாக மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசிலிருந்து விலகியும் வருகின்றனர். இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி எனப்படும், உயர்மட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று  நடைபெற்றது. மருத்துவப்பரிசோதனைக்காக சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், மூவரும் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.

உடல் நலம் குன்றியுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோடர் மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றால், 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

காங்கிரஸ் கட்சியிலிருந்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த நிலையில், கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் சந்தித்துள்ள பின்னடைவுக்கு ராகுல் காந்தியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.  முடிவுகள் அனைத்திலும் ராகுலின் தலையீடு இருப்பதாகவும், மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை எனவும் குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார்.

மவுலிவாக்கம் முதல் நொய்டா வரை.. தரை மட்டமான பிரமாண்ட கட்டிடங்கள்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மட்டுமே தலைவராக பொறுப்பேற்க தகுதியானவர் எனக் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்து 7 ஆண்டுகள் கழித்து 1998- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

தொடர்ந்து 2017- ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். 2017- ஆம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்ட ராகுல் காந்தி, 2019 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகினார். 2019- ஆம் ஆண்டு ஜூலை 3- முதல் சோனியா காந்தி காங்கிரசின் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார்.

First published:

Tags: Congress, Rahul gandhi, Sonia Gandhi