முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் தலைவர் போட்டி: மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்... திரிபாதி மனு தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் போட்டி: மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்... திரிபாதி மனு தள்ளுபடி

சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே

சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே

விண்ணப்பத்தில் கையெழுத்தில்லை என்பதால் K.N. திரிபாதியின் மனு நிராகரிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Delhi, India

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 2 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு ஒரு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோருக்கு இடையே தான் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மூத்த தலைவர்களான சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். முதலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், உட்கட்சி பிரச்னையால் பின் வாங்கினார்.

இதையும் வாசிக்க: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: களத்தில் இறங்கிய மல்லிக்கார்ஜுன கார்கே!

இந்நிலையில், விண்ணப்பத்தில் கையெழுத்தில்லை என்பதால் K.N. திரிபாதியின் மனு நிராகரிக்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனு ஏற்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் அக்டோபர் 8 ஆம் தேதி வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள். யாரும் மேட்புமனுவை திரும்பப்பெறவில்லை என்றால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Congress leader, Mallikarjun Kharge, Shashi tharoor