ஹோம் /நியூஸ் /இந்தியா /

சத்திஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? பரீசிலனையில் இருக்கும் நால்வர்

சத்திஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? பரீசிலனையில் இருக்கும் நால்வர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

மொத்தமுள்ள 95 தொகுதிகளில் 65 தொகுதிவரை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது, சத்திஸ்கரில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சத்திஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின், பூபேஸ் பாகில், டி.எஸ்.சிங் டியோ, தம்ராஜ்வாஜ் சாஹூ, சரண் தாஸ் மஹந்த் ஆகிய நால்வர் முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் உள்ளனர்.

  இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு இன்று வெளியானது. அதில் சத்திஸ்கரில், ராமன்சிங் தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்தி, காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலிலிருந்த பா.ஜ.க, ஆட்சியை இழந்துள்ளது. மொத்தமுள்ள 95 தொகுதிகளில் 65 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது, சத்திஸ்கரில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது முதல்வர் பந்தயத்தில் நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.

  பூபேஸ் பாகீல்

  சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் படான் தொகுதி எம்.எல்.ஏ பூபேஸ் பாகில். 2003-2008 காலத்தில் துணை எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 2014-ம் ஆண்டு சத்திஸ்கர் காங்கிரஸ் தலைவரானார். மத்தியப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த சத்திஸ்கர் காலத்தில், திக் விஜய சிங் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு அஜித் ஜோகியின் அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளார்.

  டி.எஸ்.சிங் டியோ

  சத்திஸ்கரின் தற்போதைய எதிர் கட்சித் தலைவர் டி.எஸ்.சிங் டியோவின் பெயரும் முதலமைச்சர் போட்டியில் உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட மிகப் பெரும் பணக்கார வேட்பாளர் இவர். ராமன் சிங்குடன் இணக்கமாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு.

  தம்ராத்வாஜ் சாஹூ

  சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கும் ஒரே காங்கிரஸ் எம்.பி தம்ராத்வாஜ் சாஹூ. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதில் இவரின் பங்கு முக்கியமானது. அவர், ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று கருதப்படுகிறது.

  சரண் தாஸ் மஹன்ட்

  மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் சரண் தாஸ் மஹன்ட். மத்திய அமைச்சராகவும் இருந்தவர். 2008-ம் ஆண்டு சத்திஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அவருடைய பெயரும் முதலமைச்சருக்கான பரிசீலனையில் உள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Chhattisgarh Election 2018, Congress