Home /News /national /

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் டெலிட் ஆனது

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் டெலிட் ஆனது

காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனல் டெலிட் ஆனது

காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனல் டெலிட் ஆனது

காங்கிரஸ் கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் யூடியூப் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. Indian National Congress என்ற இந்த யூடியூப் சேனல் டெலீட் ஆகியுள்ளதாக அந்த கட்சியே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களின் யூடியூப் சேனல் Indian National Congress டெலீட் ஆகியுள்ளது. இதை நாங்கள் சரி செய்ய தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    இதற்காக கூகுள்/யூடியூப் நிர்வாக அணியுடன் தொடர்பில் உள்ளோம். இது டெக்னிகல் கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது சதி வேலை காரணமாக ஏற்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இதை சீர்செய்து மீண்டும் சேனல் இயங்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இந்த யூடியூப் சேனல் மூலமாகத் தான் கட்சித் தலைவர்களின் மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி உரைகளும், செய்தித் தொடர்பாளர்கள், மூத்த தலைவர்களின் செய்தியாளர் சந்திப்புகளும் ஒளிபரப்பப்படும்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி.. குமரி முதல் காஷ்மீர் வரை பயணம்

    காங்கிரஸ் கட்சி கள அளவில் கட்சியை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து புதிய எழுச்சியை உருவாக்க நாடு முழுவதும் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை தொடங்குகிறார். அங்கு காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அவரின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த யாத்திரை தொடங்க சில நாள்களே உள்ள நிலையில், அக்கட்சிக்கு புதிய குடைச்சலாக யூடியூப் சேனல் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress, Youtube

    அடுத்த செய்தி