டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம்: புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்ய வாய்ப்பு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

news18
Updated: August 10, 2019, 7:31 AM IST
டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம்: புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு செய்ய வாய்ப்பு!
கோப்புப் படம்
news18
Updated: August 10, 2019, 7:31 AM IST
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார். 2 மாதங்களுக்கு மேலாக கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்காததால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தியை தலைவராக நியமிக்கலாம் என்றும் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஆனால், தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா காந்தியும் மறுத்துவிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

இதில், காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதேபோன்று கட்சிக்கு இடைக்கால தலைவரை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், காரியக் கமிட்டி கூட்டம் குறித்து டெல்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் நேற்றிரவு சந்தித்து பேசினர்.

Loading...

அப்போது கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளவர்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் பெயரையும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்வது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...