ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய - சீன வீரர்கள் மோதல் : நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

இந்திய - சீன வீரர்கள் மோதல் : நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் போராட்டம்

இந்தியா - சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மத்திய அரசு மவுனம் காப்பது ஏன் என கேள்வி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே நிகழ்ந்த மோதல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில், இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே எல்லை தொடர்பாக அண்மையில் மோதல் வெடித்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, இந்தியா-சீன வீரர்கள் மோதல் குறித்து விவாதிக்க கூடாது என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதாகவும், உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவில்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஷாருக் கானை உயிரோடு எரிப்பேன் - பதான் பட விவகாரத்தில் சாமியார் சர்ச்சை கருத்து

 

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா - சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மத்திய அரசு மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர்கள், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர்,  எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளை அனுமதிக்க வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். பின்னர் மக்களவை கூடியதும், இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

First published:

Tags: China vs India, Congress, Delhi, Tamil News