Home /News /national /

ப.சிதம்பரம் மீது பழிவாங்கும் நடவடிக்கை: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!

ப.சிதம்பரம் மீது பழிவாங்கும் நடவடிக்கை: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, சிதம்பரத்தை சிக்க வைக்கும் நோக்கில் அவருக்கு எதிராக காய் நகர்த்தப்படுவதாக முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

  • News18
  • Last Updated :
    மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் ப.சிதம்பரத்தை பழிவாங்கவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    அத்துடன், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடைச் சட்டம் போன்றவற்றையும் கடுமையாக சாடி வந்துள்ளார்.

    இதுபோன்ற, காரணங்களால் சிதம்பரத்தை பழிவாங்கவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ப.சிதம்பரம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று சட்டப்படி நிரூபிப்பார் என்று கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயலாகவே பார்க்கப்படுவதாக வழக்கறிஞர்களும் குறை கூறியுள்ளனர்.

    தற்போதைய சூழலைப் பொறுத்தவரை, சிதம்பரத்தை சிக்க வைக்கும் நோக்கில் அவருக்கு எதிராக காய் நகர்த்தப்படுவதாக முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டிலும் பரபரப்பான சூழல் நிலவியது. அத்துடன், அடையாறில் உள்ள அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் கட்சித் தொண்டர்கள் கூடினர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: P.chidambaram

    அடுத்த செய்தி