Home /News /national /

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி!

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி!

Karnataka Local Body Polls: கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் 498 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. ஆளும் பாஜக 437 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

    கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

    ஒட்டுப்பதிவு அடிப்படையில் பார்க்கும் போது, 42.06 சதவீத வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. பாஜக 36.90 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

    கர்நாடகாவில் பதவிகாலம் நிறைவுபெற்ற 5 நகராட்சிகள், 19 நகர சபைகள், 34 பேரூராட்சிகள் ஆகிய 58 நகர உள்ளாட்சிகளின், 1,185 வார்டுகளுக்கு பொதுத்தேர்தல்; 9 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதுபோலவே 57 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது.

    Also read:  லாக்டவுன் விதிமீறியவர்களை துப்பாக்கி முனையில் ஊர்வலம் அழைத்துச்சென்று அவமதித்த சீன போலீசார்

    பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. சிக்கமங்ளூரு, கதக் பெட்டகேரி, ஹெப்பகோடி ஆகிய மூன்று நகராட்சிகளை பாஜக, தனி பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

    ஹொஸ்பேட், ஷிரா நகராட்சிகளில் காங்கிரஸ் அதிக வார்டுகளில் வென்றுள்ளது. மொத்தமுள்ள 19 டவுன் சபைகளில் காங்கிரஸ், அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. டவுன்சபைகளில் சந்தாபுராவை பாஜகவும், பிடதியை மஜதவும் கைப்பற்றியுள்ளன.

    தேர்தல் நடந்த 34 பேரூராட்சிகளில் 386 பதவிகளிலும் காங்கிரஸ் அதிக இடங்கள் வென்றுள்ளது. பாஜக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுயேச்சைகள் 3வது இடத்திலும்; மஜத, நான்காம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.

    முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான சிக்காவியின் பங்காபுரா பேரூராட்சியின் 23 வார்டுகளில், 14 ல் காங்கிரஸ் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெறும் 7ல் மட்டுமே வென்றது.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, காங்கிரஸ் சித்தாந்தம் மற்றும் அதை நம்பும் மக்களின் செல்வாக்கை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, Congress, Karnataka

    அடுத்த செய்தி