உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் தாய்க்கு வேட்பாளராகப் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
Also read: பெண்ணிடம் கணவரின் வீட்டார் எந்த பொருளை கேட்டாலும் அது வரதட்சணையே.. உச்சநீதிமன்றம்
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலை உறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 50 பெண் வேட்பாளர்கள் அடங்கிய 125 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று இந்தப் பட்டியலை வெளியிட்டார்.
இதில், நாட்டையே உலுக்கிய உன்னவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணின் தாய் ஆஷா சிங்குக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உன்னாவ் பங்கார்மாவ் தொகுதியில் ஆஷா சிங் போட்டியிடுகிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு இதே தொகுதியில் பாஜக வேட்பாளராக குல்தீப் செங்கார் போட்டியிட்டு வென்றார். தற்போது, குல்தீப் செங்கார் உன்னாவ் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிரியங்கா காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளர் பட்டியல் புதிய செய்தியை கூற வேண்டும். பாலியல் பலாத்காரம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச்சென்ற பொதுமக்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Priyanka gandhi