Home /News /national /

காங்கிரஸ் மீது மறைமுக அதிருப்தியை வெளிப்படுத்திய மூத்த தலைவர் - காங்கிரஸுக்கு சோதனை மேல் சோதனை

காங்கிரஸ் மீது மறைமுக அதிருப்தியை வெளிப்படுத்திய மூத்த தலைவர் - காங்கிரஸுக்கு சோதனை மேல் சோதனை

Congress

Congress

சமீபத்தில் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் இதே நிலை ஏற்பட்டதால், அவர் காங்கிரஸில் இருந்து விலகி புதுக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது,

  காங்கிரஸ் கட்சி தனக்கு போதிய ஆதரவு தரவில்லை என உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

  இந்திய அரசியலில் பழம்பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி சமீப ஆண்டுகளில் மோசமான நிலையை எட்டியிருக்கிறது. கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் எதிர்கட்சி அந்தஸ்தை பெரும் அளவுக்கு கூட இடங்கள் பெற முடியாமல் போனது, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உட்கட்சி பூசலால் ஆட்சியை பறிகொடுத்தது, பிரதான கட்சியாக வந்தும் சில மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது மற்றும் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் திணறுவது. இது தவிர தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் 23 மூத்த தலைவர்கள் கட்சிக்கு எதிராக பேசி ஓரங்கட்டப்பட்டிருப்பது என காங்கிரஸ் கட்சி பெருத்த சறுக்கலை சந்தித்து வருகிறது.

  இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்திய அதிர்ச்சியாக மாறியிருக்கிறார் உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த ட்வீட்கள், காங்கிரஸ் கட்சி மீதான அவரின் கசப்பை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

  Read more:  இப்படி பேச கங்குலிக்கு உரிமையே இல்ல - கோலி கேப்டன்சி விவகாரத்தில் சீறும் வெங்சர்கர்

  இளம் வயது முதலே காங்கிரஸ் கட்சியின் தீவிர களப்பணியாளராக பணியாற்றி ஹரிஷ் ராவத், எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர், முதல்வர் என பல பதவிகளையும் வகித்து, காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

  Harish Rawat to rebel against Congress? Cryptic tweets raise speculation - The Week
  ஹரிஷ் ராவத்


  ஹரிஷ் ராவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது, “தேர்தல் எனும் கடலில் நாம் நீந்தவேண்டும், ஆனால் கட்சி எனக்கு ஆதரவு கொடுப்பதை கைவிட்டு, எதிர்மறையான வேலைகளில் ஈடுபடுகிறது. இது விநோதமாக இருக்கிறது.

  Read more: படுத்துக்கொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முன்னாள் டிஜிபிக்கு நீதிபதி எச்சரிக்கை

  அவர்களின் அதிகாரத்தினால், கடலில் நான் நீந்திச் செல்லும் பாதையில் பல முதலைகளை இறக்கி விட்டுள்ளனர். நான் யாரின் வழிநடக்க வேண்டுமோ அவர்கள் என் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டனர். இதனால் நான் இனி நீந்த முடியாது, ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணரத்தொடங்கியிருக்கிறேன்.

  இந்த நேரத்தில் என் எண்ணத்தில் இருந்து ஒரு ஒலி கேட்கிறது. இந்த சவால்களை நான் முறியடிக்க பலமுடன் இருக்கிறேன் என அந்த ஒலி கூறுகிறது. உண்மையில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. புத்தாண்டு எனக்கு நல்ல வழியை காட்டும் என நம்புகிறேன். கேதார்நாத் ஆண்டவர் எனக்கு வழியை காட்டுவார்!” இவ்வாறு ராவத் காங்கிரஸ் தலைமையை மறைமுகமாக சாடி இருக்கிறார்.

  Read more:  அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

  உத்தரகண்ட் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சி தலைமை மீது ஹரிஷ் ராவத் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. சமீபத்தில் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும் இதே நிலை ஏற்பட்டதால், அவர் காங்கிரஸில் இருந்து விலகி புதுக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   
  Published by:Arun
  First published:

  Tags: Congress

  அடுத்த செய்தி