Home /News /national /

34 வருடத்திற்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை! - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

34 வருடத்திற்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை! - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Navjot singh sidhu

Navjot singh sidhu

Navjot singh Sidhu | 34 வருடத்திற்கு முந்தைய வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

    பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 1988ம் ஆண்டில் நடந்த சாலை தகராறில் சித்துவும் அவர் உடனிருந்தவர்களும் தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் சித்துவை விடுவித்து 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    எனினும், அந்த உத்தரவை மறுஆய்வு செய்யமாறு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். தொடர்ந்து, தான் அடித்த ஒரே அடியால் பாதிக்கப்பட்டவரின் மரணம் நிகழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மேற்கோள் காட்டி, தனக்கு எதிரான சாலை தகராறு வழக்கின் நோக்கத்தை பெரிதாக்க கோரிய மனுவை சித்து எதிர்த்து முறையிட்டிருந்தார்.

    டிசம்பர் 27, 1988 அன்று, பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன், வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சித்து மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர் ரூபிந்தர் சிங் சந்து, ஆகியோரும் குர்னாம் சிங்கை அவரது காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து, குர்னாம் சிங் உயிரிழந்துள்ளார்.

    கடந்த 1999 செப்டம்பர் 22, அன்று பாட்டியாலாவின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, சித்துவையும் அவரது உடனிருந்தவர்கள் ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.

    இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சித்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், நவ்ஜோத் சிங் சித்து நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Navjot singh sidhu

    அடுத்த செய்தி