உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வதோதரா மற்றும் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி, தற்போது வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறார்.
கடந்த முறை வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் மூன்றே முக்கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி ரகசியமாக வைத்துள்ளது. இந்நிலையில், வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதிக்கு சென்று பரப்புரை செய்வது இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. முன்னதாக, கட்சித் தலைமை உத்தரவிட்டால் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார் என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also see...உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு... அணியில்
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.