• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Save Farmers : ‘விவசாயிகளை காப்பாற்றுவோம்’ - நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

Save Farmers : ‘விவசாயிகளை காப்பாற்றுவோம்’ - நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

“நாங்கள் எங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து, ‘விவசாயிகளை காப்பாற்றுவோம்’ என்ற பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு பத்துகக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால், விவசாயிகளின் இந்த திட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. கொரோனா பரவல் காரணமாக விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால்,டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலேயே போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி இன்று முதல் நாள்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ முடிவு செய்துள்ளது.

    விவசாயிகள் போராட்டம்


    அதன்படி, போராட்டத்திற்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு செல்ல உள்ளனர். அங்கு ‘விவசாயி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியை அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். “நாங்கள் எங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக தினந்தோறும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Must Read : டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்வி... ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது - மத்திய அமைச்சர் விளக்கம்

    இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டத்தால் அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அத்துடன், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “விவசாயிகளை காப்பாற்றுவோம்”, “நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: