• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சங்கி என்பதா? மோடிக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன் - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பதிலடி

சங்கி என்பதா? மோடிக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன் - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பதிலடி

Shashi Tharoor

Shashi Tharoor

நமது அரசியல் எதிரிகளிடம் மனித நேயம் பேணவும், மரியாதை செய்யவும் மகாத்மா காந்தி நமக்குக் கற்றுக் கொடுத்தார். இதுவே, இப்போது என்னை ஒரு சங்கி அனுதாபி ஆக்குகிறது போலிருக்கிறது!

  • Share this:
பாஜக தலைவர் எல்.கே.அத்வானிக்கு வாழ்த்து கூறியதற்காக விமர்சனங்களுக்கு ஆளாக்கட்டுள்ளேன், காந்தியின் கொள்கைகளை நான் கடைபிடித்தது, இப்போது என்னை ஒரு சங்கி அனுதாபியாக மாற்றுவதாக தோன்றுகிறது என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார்..

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசிதரூர், மனதில் பட்டதை சங்கடப்படாமல் பேசிவிடுவதால் அவ்வப்போது சர்சைகளில் சிக்கிவிடுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் விரைவில் தேவை எனவும் சசிதரூர் பேசியது நினைவுகூறத்தக்கது.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு கடந்த நவம்பர் 8ம் தேதி 94வது பிறந்தநாள் என்பதால், பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்கள் கூறினர். காங்கிரஸ் எம்.பி சசிதரூரும் எல்.கே.அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.



“ஒரு நல்ல மனிதர், அரசியலில் ஒரு ஜென்டில்மேன், பரந்த உள்ளம் மற்றும் சிறந்த மரியாதை கொண்ட ஒரு தலைவருக்கு அன்பான வாழ்த்துக்கள். ஹேப்பி பர்த்டே எல்.கே.அத்வானி!” என அன்றைய தினம் சசிதரூர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து கூறி பதிவிட்டிருந்தார்.

அரசியலில் பாஜகவும், காங்கிரஸும் இரு துருவங்களாக இருக்கும் நிலையில் பாஜக தலைவரான அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியதை காங்கிரஸ் தொண்டர்கள் ரசிக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் சசிதரூர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவரை விமர்சித்து பதிவிட்டு வந்த நிலையில், தற்போது அத்வானிக்கு வாழ்த்து கூறியதற்காக தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி தந்துள்ளார் சசிதரூர்.



அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதற்காக, மோசமான எதிர்விளைவுகளை கண்டு நான் வெளிப்படையாக திகைக்கிறேன். நமது அரசியல் உரையாடலில் இருந்து நாகரீகம் முற்றிலும் மறைந்துவிட்டதா? நமது அரசியல் எதிரிகளிடம் மனித நேயம் பேணவும், மரியாதை செய்யவும் மகாத்மா காந்தி நமக்குக் கற்றுக் கொடுத்தார். இதுவே, இப்போது என்னை ஒரு சங்கி அனுதாபி ஆக்குகிறது போலிருக்கிறது!



 



உண்மையில் காந்தி பாவத்தை எதிர்த்துப் போராட கற்றுக்கொடுத்தார், ஆனால் பாவியை நேசிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார். பாவிகளிடமும் அன்பு செலுத்துவதே அஹிம்சை. நல்லது, தீமை இரண்டுமே மனிதர்களிடம் கலந்தது தான். இரு தரப்பிலும் சகிப்பின்மையை நான் கண்டிக்கிறேன். ஆம், நான் அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை தொடர எண்ணுகிறேன், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை நான் எதிர்க்கிறேன். எனது 40 ஆண்டுகால எழுத்துப் பணி நான் எதன் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதை எனக்கு தெளிவாக்கியிருக்கிறது. என்னைப் பற்றி புரியாதவர்கள் தான் என்னை சங்கி என அழைப்பார்கள். அவர்கள் அப்படி கூறுவதால் என் மதிப்பு குறைந்துவிடாது” இவ்வாறு சசி தரூர் கூறியிருக்கிறார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: