ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கி நிபந்தனயற்ற மன்னிப்பு கோரினார் சசி தரூர்

ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. சர்ச்சையில் சிக்கி நிபந்தனயற்ற மன்னிப்பு கோரினார் சசி தரூர்

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சசி தரூர்

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சசி தரூர்

இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாத சர்ச்சை விவகாரத்தில் சசி தரூர் மன்னிப்பு கோரியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் போட்டியிடும் சூழலில் அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தனது தேர்தல் விளம்பரங்களின் பயன்படுத்திய இந்திய வரைப்படத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறவில்லை. இந்தியாவை சேர்ந்த பகுதிகளாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை காங்கிரஸ் கட்சி விளம்பரத்தில் சேர்க்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  பாஜகவினர் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய சமூக வலைத்தள பக்கங்களில் தவறான இந்திய வரைப்படத்தை பகிர்ந்து கடும் கண்டனங்களை பகிர்ந்து வருகின்றன. குறிப்பாக, ராகுல் காந்தி பாரத் ஜோடோ என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் இந்தியாவை பிரிக்கும் வேலையை செய்து வருவதாக விமர்சனத்தை முன்வைத்து வந்தனர்.

  பலர் பொதுவாக காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை குறிவைத்து தாக்கி விமர்சனம் செய்து வந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், ஐடி பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் கட்சி நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார். பாஜக மற்றும் அதன் ஐடி பிரிவு உண்மைக்கு மாறாக இந்திய வரைபட விவகாரத்தில் ராகுல் காந்தியை குறிவைத்து அவரின் இமேஜை உடைக்க பார்க்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர் சசி தரூர். எனவே, அவர் மற்றும் அவரது அணியினர் தான் இதற்கு விளக்கம் தர வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

  இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், சசி தரூர் ட்விட்டரில் மன்னிப்பு கோரி விளக்கமளித்துள்ளார். அவர் தனது விளக்கப் பதிவில், "இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட விஷயம் அல்ல. எங்கள் தொண்டர் குழுவின் தவறால் நிகழ்ந்தது. தவறு தெரிந்ததும் அது உடனே திருத்தப்பட்டு சரி செய்யப்பட்டது. இந்த தவறுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்" என பதிவு வெளியிட்டுள்ளார்.

  இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: களத்தில் இறங்கிய மல்லிக்கார்ஜுன கார்கே!

  காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. சசி தரூரும், மல்லகார்ஜுன கார்கேவும் போட்டியாளர்களாக களமிறங்கும் நிலையில், சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவு கார்கே பக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, கார்கேவுக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Congress, Rahul gandhi, Shashi tharoor