Home /News /national /

கேரள மக்கள் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் - ராகுல் காந்தி புகழாரம்

கேரள மக்கள் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் - ராகுல் காந்தி புகழாரம்

ராகுல்காந்தி நடைபயணம்

ராகுல்காந்தி நடைபயணம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் 19 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala | Tamil Nadu
கேரளாவில் யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் செயல்படுபவர்கள் கேரள மக்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன்விளையில், கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை  நிறைவு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் 4 நாட்களில் 56 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.

தமிழக பாத யாத்திரையை முடித்ததும் ராகுல் காந்தி கார் மூலம் தமிழகம் - கேரள எல்லையில் உள்ள செருவாரகோணம் பகுதிக்கு சென்று இரவில் தங்கினார். அதன்பின் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து காரில் புறப்பட்ட ராகுல்காந்தி பாறசாலை பகுதிக்கு சென்றார்.

தொடர்ந்து காலை 7 மணிக்கு காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார். அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கே.சி வேணுகோபால், சசி தரூர், உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

ALSO READ | வைகோ ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோ! ’மாமனிதன் வைகோ’ திரைப்பட வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

நடைபயணத்தின் போது சாலையோர தேனீர் கடைக்கு சென்ற ராகுல் அங்கு தேனீரை ரசித்து குடித்தார். சுமார் 3 மணி நேர நடைபயணம் மேற்கொண்ட அவர் நெய்யாடின்கராவில் பாதயாத்திரையை நிறைவு செய்தார். அங்கு ஓய்வு நேரத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாலை 4 மணியளவில் நெய்யடின்கராவில் உள்ள மூனுகால்லின்மூடுவில் பாத யாத்திரையை துவக்கினார்.
நடைபயணத்தின் போது குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சியபடி ராகுல் நடந்து சென்றார். ராகுலின் கரம் பிடித்தபடி சிறுமிகள் ஆர்வமுடன் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.

மேலும், சாலையின் இருபுறமும் கூடியிருந்தவர்களை பார்த்து கையசைத்தபடி ராகுல் வேகமாக நடந்து சென்றார். வீட்டு மாடியில் நின்றபடி ஏராளமானோர் மலர் தூவி ராகுலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி, நெமமில் 5-வது நாள் யாத்திரையை நிறைவு செய்தார். திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நெமம் முதல் பட்டோம் வரையிலும் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல், மாலையில் பட்டோம் முதல் கலக்கோட்டம் வரை யாத்திரை மேற்கொள்கிறார். அவர் கேரள மாநிலத்தில் 19 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.

ALSO READ | பொங்கல் பண்டிகை: ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது

முன்னதாக நடைபயணத்தின் போது பேசிய ராகுல்காந்தி, கேரள மக்கள் அனைவரையும் மதிக்க கூடியவர்கள் என்றும், பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் கூறினார். எழுத்தறிவு மிக்க கேரள மக்கள் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் செயல்படுவது அவர்களது இயல்பு என்றும் புகழாரம் சூட்டினார்.
Published by:Anupriyam K
First published:

Tags: Congress President Rahul Gandhi, Kerala, Rahul gandhi

அடுத்த செய்தி