ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரை; வாஜ்பாய் நினைவிடத்திற்கு செல்லும் ராகுல்காந்தி

டெல்லியில் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரை; வாஜ்பாய் நினைவிடத்திற்கு செல்லும் ராகுல்காந்தி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் நடைபயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி, வாஜ்பாய் நினைவிடத்திற்கும் செல்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலை மையமாக வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை நடைபயணத்தை நடத்தி வருகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பித்த இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என 9 மாநிலங்கள், 46 மாவட்டங்கள் என கிட்டத்தட்ட 3,000 கி.மீ நீண்டது.

108வது நாளான இன்று ராகுல்காந்தியின் நடை பயணம் டெல்லிக்குள் நுழைந்தது. பதேர்பூர் எல்லையில் அவரை காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். டெல்லியின் ஆஷ்ரம் சவுக் உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் வழியாக யாத்திரை சென்ற நிலையில், அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இணைந்துகொண்டனர்.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அப்பல்லோ மருத்துவமனை அருகே யாத்திரையை சற்று நேரம் நிறுத்திய ராகுல் காந்தி, ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவிட்டார். ஆம்புலன்ஸ் சென்ற பின்னர் நடைபயணம் தொடர்ந்தது. ராகுலின் யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இன்று கலந்துகொள்ள இருக்கிறார்.

இதையும் படிங்க; ராகுல்காந்தியின் நடை பயணத்திற்கு திடீர் சிக்கல்? மத்திய அரசின் கட்டுப்பாட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி!

பயணத்தின்போது பேசிய ராகுல்காந்தி, “ஆர்எஸ்எஸும் பாஜகவினரும் நாட்டில் வன்முறையையும், பயத்தையும் பரப்புகின்றனர். என்னுடைய பாரத் ஜோடோ யாத்திரை மூலம் உண்மையான இந்தியாவுக்கு சாட்சியாக மக்கள் நிற்கிறார்கள்” என்று தெரிவித்தார். இதனிடையே ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல்லில் உள்ள பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் நினைவிடத்திற்கும் ராகுல் காந்தி செல்கிறார்.

First published: