முகப்பு /செய்தி /இந்தியா / WATCH | பனிமழையில் பாசமழை பொழிந்த ராகுல்காந்தி.. வைரல் வீடியோ!

WATCH | பனிமழையில் பாசமழை பொழிந்த ராகுல்காந்தி.. வைரல் வீடியோ!

பிரியங்கா காந்தியுடன் பனியில் விளையாடும் ராகுல் காந்தி

பிரியங்கா காந்தியுடன் பனியில் விளையாடும் ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை பயணம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் நிறைவடைந்ததையொட்டி, திங்கள் அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

கட்சி அலுவலகத்தில் சகோதரி பிரியங்கா காந்தியை சந்தித்த ராகுல், பனிக்கட்டிகளை கையில் எடுத்துச் செல்லமாக எறிந்து பாசமழை பொழிந்தார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு நாளில் ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தி தேசிய கொடியை ஏற்றினார். இந்திய ஒற்றுமை பயணம் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் நிறைவடைந்ததையொட்டி, திங்கள் அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராகுல்காந்தி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே, கட்சி அலுவலகத்தில் சகோதரி பிரியங்கா காந்தியை சந்தித்த ராகுல், பனிக்கட்டிகளை கையில் எடுத்துச் செல்லமாக எறிந்து பாசமழை பொழிந்தார்.

First published:

Tags: Congress, Priyanka gandhi, Rahul gandhi