ஹோம் /நியூஸ் /இந்தியா /

“காஷ்மீர் மாநில அந்தஸ்தை காங்கிரஸ் மீட்டெடுக்கும்..” பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி பேச்சு!

“காஷ்மீர் மாநில அந்தஸ்தை காங்கிரஸ் மீட்டெடுக்கும்..” பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி பேச்சு!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் - ராகுல் காந்தி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் தேச ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி, தற்போது காஷ்மீரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் நர்வால் பகுதியில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். சம்பா மாவட்டத்தில் உள்ள தப்பியால் கக்வால் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டபோது அங்கு இருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற ரகுநாத் கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.

First published:

Tags: Congress, Jammu and Kashmir, Rahul gandhi