முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு பா.ஜ.க உரிமை கொண்டாடக் கூடாது- காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு பா.ஜ.க உரிமை கொண்டாடக் கூடாது- காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

மல்லிகார்ஜூன் கார்க்கே

மல்லிகார்ஜூன் கார்க்கே

இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றது தொடர்பாக மாநிலங்களவையில் நீண்ட விவாதம் எழுந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

மாநிலங்களவையில் அலுவல்கள் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார். மேலும் ஆஸ்கர் விருது வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆசிரியர், பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட எம்பி எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டார். ஆனால் இதற்கு பாஜக உரிமை கொண்டாடக் கூடாது என்றும் குறும்படத்தை மோடி இயக்கினார் என்றும் கூறக் கூடாது என தெரிவித்தார். கார்கேவின் பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

1984ஆம் ஆண்டிலேயே இந்தியா ஆஸ்கர் விருதினை பெற்றுவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் பேசினார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வேண்டிய தருணத்தில் ஆளுங்கட்சி அரசியல் செய்வதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய வைகோ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்றதை நினைவுக்கூர்ந்தார்.

ஆஸ்கர் வென்ற RRR மற்றும் The Elephant whisperers படக்குழுவுக்கு மாநிலங்களவையில் பாராட்டு!

இயற்கை எழில் கொஞ்சும் உதகையில், ஆஸ்கர் வென்ற ஆவணப்படம் படமாக்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக திமுக எம்பி வில்சனும் அதிமுக எம்.பி. தம்பிதுரையும் தெரிவித்தனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜெயாபச்சன், அமர் பட்நாயக், டாக்டர் சாந்தனு சென், பிரியங்கா சதூர்வேதி, ரஞ்சித் ராஜன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் ஆஸ்கார் விருது வென்ற படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

First published:

Tags: BJP, Oscar Awards