உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். அம்மாநிலத்தின் கோரக்பூர் எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத்தை பாஜக மேலிடம் யாரும் எதிர்பாராத விதமாக 2017ஆம் ஆண்டில் முதலமைச்சராக்கியது. 2022 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து 2ஆவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றார் யோகி. இந்து துறவியான இவர் கோரக்பூர் மடத்தின் மடாதிபதியாகவும் உள்ளார்.
எனவே, யோகி ஆதித்யநாத் எப்போதுமே காவி உடையில் மட்டும் தான் இருப்பார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு யோகி ஆதித்தயநாத் இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பையில் தொழிலதிபர்களை சந்தித்து உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.
யோகியின் இந்த பயணம் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஹுசைன் தல்வாய் கூறிய கருத்து தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. யோகி குறித்து எம்பி ஹுசைன் கூறுகையில், "முதலமைச்சர் யோகி தனது மாநிலத்தில் தான் தொழில்சாலைகளை வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு மகாராஷ்டிராவிற்கு வந்து தொழில்சாலைகளை எடுத்து செல்லக் கூடாது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி.. உடன் இருந்து கவனிக்கும் பிரியங்கா காந்தி!
அதேபோல், எப்போது பார்த்தாலும் மத விஷயங்களை பேசி காவி உடை அணிந்து சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நவீன காலத்திற்கு ஏற்ப உடை அணிய வேண்டும். நவீன சிந்தனைகளை வளர்க்க வேண்டும். அப்போது தான் மாநிலத்திற்கு தொழில் வளர்ச்சி வரும்" என்றார். காங்கிரஸ் எம்பியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்து துறவிகளை அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறுவதாக மாநில பாஜக எம்பி, எம்எல்ஏக்கள் கடும் விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Maharashtra, Saffron, Tamil News, Yogi adityanath