பொறியாளர் மீது சேற்றை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது!

பாலத்தைக் கட்டும் பொறுப்பில் உள்ள அரசுப் பொறியாளர் பிரகாஷ் ஷேடேகரின் மீது நிதேஷ் ரானேவும் அவரது ஆதரவாளர்களும் சேற்றை அள்ளி ஊற்றினர்.

news18
Updated: July 4, 2019, 10:55 PM IST
பொறியாளர் மீது சேற்றை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது!
நிதேஷ் ரானே
news18
Updated: July 4, 2019, 10:55 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பொறியாளர் மீது சேற்றை அள்ளி ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானேவை காவல்துறையினர் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திரனாத் பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ.க, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் கன்காவலி பகுதியில், மும்பை-கோவா நெடுஞ்சாலையில், கட்டப்படும் பாலத்தின் பணியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே ஆய்வு செய்தார். மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் நாராயன் ரானேவின் மகன் தான் நிதேஷ் ரானே.

அப்போது, பாலத்தின் கட்டுமானம் தரமில்லாததாக இருந்துள்ளது. எனவே, பாலத்தைக் கட்டும் பொறுப்பில் உள்ள அரசுப் பொறியாளர் பிரகாஷ் ஷேடேகரின் மீது நிதேஷ் ரானேவும் அவரது ஆதரவாளர்களும் சேற்றை அள்ளி ஊற்றினர். பொதுமக்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளது. அவர், சேற்றை அள்ளி ஊற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது. தேசிய அளவில் விவாதமானது. இந்தநிலையில், மகாராஷ்டிர மாநில போலீசார், நிதிஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40க்கும் அதிகமானோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எம்.எல்.ஏ நிதிஷ் ரானேவை கைது செய்த போலீசார், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

Also see:

First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...