ஹோம் /நியூஸ் /இந்தியா /

‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

Former speaker Ramesh kumar

Former speaker Ramesh kumar

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமாரின் பேச்சுக்கு சக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாலியல் வன்புணர்வை தடுக்க முடியாவிட்டால் அதனை என்ஜாய் பன்னுங்க என காங்கிரஸ் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் பேசியிருப்பது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

  கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள், குறித்து பல்வேறு எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்து பேச சபாநாயகரிடம் நேரம் கேட்டு ஒரே நேரத்தில் வலியுறுத்தினர். ஆனால் சபை நேரம் முடிவடையும் மாலை 6 மணிக்குள் சபையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த சபாநாயகர் உறுப்பினர்களின் கோரிக்கைகளால் திணறலை சந்தித்தார்..

  சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி சிரித்தவாறே, “நான் எப்படிப் பட்ட சூழலில் இருக்கிறேன் என்றால் இதையெல்லாம் ரசித்துவிட்டு ‘ஆமாம், ஆமாம்’ என்று சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். அவ்வளவுதான். இதைத்தான் நான் உணர்கிறேன். நான் நிலைமையைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டு, ஒழுங்கான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உங்கள் பேச்சுகளைத் தொடருமாறு எல்லோரிடமும் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் பேச நேரம் அளித்தால் சபையை எவ்வாறு நடத்துவது? இந்த சபையின் அலுவல்கள் நடக்கவில்லை என்பது தான் தன் மனக்குறை என்று விளக்கினார்.

  அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவும் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார், “பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, ​​படுத்து மகிழுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான்!”என்று சபாநாயகரிடம் கூறினார்.

  இதையும் படிங்க:   ஷீனா போரா உயிரோடு தான் இருக்கிறார் - ஷாக் கொடுத்த இந்திராணி முகர்ஜி - அதிரடி திருப்பம்

  காங்கிரஸ் எம்.எல்.ஏ சபாநாயகரின் நிலைமையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமாரின் பேச்சுக்கு சக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

  இதையும் படிங்க:   காதலியின் கணவரிடம் இருந்து தப்ப 5வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம்

  இதற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில், தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் சபாநாயகராக இருந்தபோது, “என் நிலைமை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை போன்றது. கற்பழிப்பு ஒருமுறைதான் நடந்தது. அதை அப்படியே விட்டிருந்தால் கடந்து போயிருக்கும். பலாத்காரம் நடந்ததாக நீங்கள் புகார் செய்தால், குற்றவாளி சிறையில் அடைக்கப்படுகிறார்.

  ஆனால் அது எப்படி நடந்தது என்று அவரது வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள். இது எப்போது நடந்தது, எத்தனை முறை? பலாத்காரம் ஒரு முறை நடக்கும் ஆனால் நீதிமன்றத்தில் 100 முறை பலாத்காரம் செய்யப்படுவீர்கள். இதுதான் என் நிலை.” இவ்வாறு அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arun
  First published:

  Tags: Congress, Karnataka, Rape