புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

ஜான்குமார்

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.  ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 • Share this:
  புதுச்சேரியில் எம்.எல்.ஏ.  ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

  சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் நமச்சிவாயம். இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

  அந்த வகையில் மால்லாடி கிருஷ்ணாராவைத் தொடர்ந்து இன்று ஜான் குமார் ராஜினாமா செய்துள்ளார். இதனால் முதலமைச்சர் நாராணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றது.

  Must Read : கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது - பினராயி விஜயன் அதிரடி

   

  ‘புதுச்சேரி நலனுக்காக ராஜினாமா செய்துள்ளேன்’ என்று ஜான் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு, தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க செய்யவேண்டும் எனவும் கூறி துணைநிலை ஆளுநரிடம் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  புதுச்சேரியில், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எதிர்கட்சியினருக்கும் 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் சம பலத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: