நாட்டில் நிலவும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு தரும் விதமாக கர்நாடகாவைச் சேர்ந்த
காங்கிரஸ் எம்எல்ஏ புதுமையான செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த எம்எல்ஏ தான் சாதிய பாகுபாட்டிற்கு எதிரானவர் என்பதை நிரூபிப்பதற்காக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உணவை ஊட்டிவிட்டு, மீண்டும் அவர் வாயிலிருந்து எடுத்து தர சொல்லி சாப்பிட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனியார் பள்ளியில் அம்பேத்கர் ஜெயந்தி விழா மற்றும் ஈத் பண்டிகையை ஒருங்கிணைத்து விழா ஒன்று காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் ஏ கான் தலைமையில் நடைபெற்றது. இதில் சாமராஜப்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஜமீர் ஏ கான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது சாதிய வன்கொடுமை குறித்து பேசிக் கொண்டிருந்த அவர் அங்கு நின்று கொண்டிருந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவருக்கு உணவு ஊட்டிவிட்டார். அதன்பின்பு மீண்டும் அவரது வாயிற்குள் இருந்து உணவை எடுத்து தனக்கு ஊட்டிவிடும்படி கூறினார். இந்த செயலால் அந்த மேடை பரபரப்பு அடைந்தது.
இதை செய்து விட்டு அவர் மனிதனுக்குள் சாதி, மதம் ஆகியவை மூலம் வேறுபாடுகளை விதை முறையல்ல. மனித ஒற்றுமையே முக்கியம். இதை நான் நிரூபித்துள்ளேன் என்றார். மேலும், அனைத்தையும் விட மனிதத்தன்மையை மேலானது. உண்மையான மதம் என்பது மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதே என்றார். மேடையில் உரையாற்றிய பின்னர் எம்எல்ஏ ஜமீர் அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவு பறிமாறினார்.
இதையும் படிங்க:
ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாக வாசித்து சாதனை படைத்த 5 வயது சிறுமி!
மேடையில் எம்எல்ஏ செய்த இந்த விசித்திர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு சில பாராட்டுகள், சில விமர்சனங்கள் என கலவையான எதிர்வினைகள் வந்துள்ளன. தீண்டாமையை ஒழிக்கும் எண்ணத்துடன் எம்எல்ஏ செய்த செயல் சிறப்பானது என சிலர் கருத்து கூறினாலும், மேலும் சிலர் இது போன்ற ஸ்டன்ட் செயல்கள் வெறும் பரபரப்புக்காக செய்வது என விமர்சித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.