கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் சொன்ன செய்தி!

கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் சொன்ன செய்தி!
மோடி ராகுல் காந்தி
  • Share this:
பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப் பிடிக்கும் வீடியோவைப் பதிவிட்டு காங்கிரஸ் கட்டிப்பிடி(Hug day) தின வாழ்த்து தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள். அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள்’ என்று ஆக்ரோஷமாக பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். ராகுல் காந்தியின் செயல் பல தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றது.

இந்தநிலையில், இன்று உலகம் முழுவதும் கட்டிப்பிடி(Hug day) தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில், ‘மோடியை ராகுல் காந்தி கட்டியணைக்கும் வீடியோவைப் பதிவிட்டு கட்டிப்பிடி தின வாழத்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ பதிவில், ‘கட்டிப் பிடி தினத்தன்று பா.ஜ.கவுக்கு நாங்கள் ஒரு செய்தி வைத்துள்ளோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான் உங்கள் மீது அன்பு செலுத்துவேன் என்று ராகுல் காந்தி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளனர்.அன்பை வெளிப்படுத்த திறனற்றவன் கோழை. அன்பை வெளிப்படுத்துவது தைரியத்தின் தனிச்சிறப்பு என்ற காந்தியின் விளக்கத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக காங்கிரஸ் அன்பை நம்புகிறது. வெறுப்பை அல்ல’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:

First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading