வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

ரஃபேல் ஊழல் குறித்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.

Web Desk | news18
Updated: April 2, 2019, 2:40 PM IST
வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
Web Desk | news18
Updated: April 2, 2019, 2:40 PM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

ப.சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட சிறப்புக்குழு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அறிக்கைத் தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு உருவாக்க காங்கிரஸ் கட்சி பணியாற்றும் என்றும் அறிக்கை கூறுகிறது.

’நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 72ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வளமும் நலமும் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரஃபேல் ஊழல் குறித்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் கடுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.

மேலும் பார்க்க: ஆட்சியை கலைப்பதெல்லாம் அந்தக்காலம் : ப.சிதம்பரத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.ஐபிஎல் தகவல்கள்:

First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...