நாட்டைத் துண்டாக்கக் கூடியது! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் அருண் ஜெட்லி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு குடும்பம் செய்த மிகப் பெரிய தவறை நோக்கி காங்கிரஸ் நகருகிறது.

நாட்டைத் துண்டாக்கக் கூடியது! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் அருண் ஜெட்லி
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
  • News18
  • Last Updated: April 2, 2019, 6:06 PM IST
  • Share this:
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இந்த நாட்டை துண்டாடக் கூடிய அம்சங்கள் உள்ளன. காங்கிரஸின் அறிக்கை இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்று பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இன்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேசத்துரோகத்தைக் குறிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


படிக்க... நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

படிக்க... வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

இந்தநிலையில், தேர்தல் அறிக்கை குறித்து விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சில வாக்குறுதியில் காங்கிரஸ் தலைவரின் நண்பர்கள் எழுதியது போல தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாக்குறுதிகள், இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது.காங்கிரஸ் அவர்களுடைய நோக்கத்துக்காக முயல்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதாக இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள சில அம்சங்கள் நாட்டைத் துண்டாடும் விதமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு குடும்பம் செய்த மிகப் பெரிய தவறை நோக்கி காங்கிரஸ் நகருகிறது. காங்கிரஸ் தலைமை தற்போது ஜிகாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களின் பிடியில் உள்ளது. தேசத்துரோக வழக்கை நீக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

படிக்க... வயநாட்டில் போட்டி ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

காங்கிரஸின் இந்த அறிவிப்பால் அந்தக் கட்சிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. 10 ஆண்டுகள் நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் பட்ஜெட்டை நான் ஒருபோதும் நம்பியதில்லை.

ஏனென்றால், பேய் எப்போதும் பெரியதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். காங்கிரஸின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள அவருடைய முழு அறிக்கையையும் படிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:


ஐ.பி.எல் தகவல்கள்...!

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading