தேர்தலில் தான் தோல்வி மன உறுதியை இழக்கவில்லை - காங்கிரஸ்

ராகுல் காந்தி

மேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் வாஷ் அவுட் ஆகியிருக்கிறது.

  • Share this:
நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் எந்த மாநிலங்களில் யார் ஆட்சியமைக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது.

அசாம்:

இதில் அசாம் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது பாஜக. 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாமில் பாஜக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி+முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 60 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மட்டுமே 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

கேராளா:

காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருந்த மற்றொரு மாநிலமாக இருந்தது கேரளா. ஆனால் அங்கு பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகம்:

காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வெற்றி பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. 17 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி:

தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலம் புதுவை. இருப்பினும் தற்போது அங்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுகிறது, காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேற்குவங்கம்:

மேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் வாஷ் அவுட் ஆகியிருக்கிறது.

தமிழகத்தை தவிர காங்கிரஸ் கட்சி சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறாத நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் கட்சி அசாம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் மன உறுதியை இழக்கவில்லை. கடினமான நேரங்களில் மக்களுக்காக, மக்களின் குரலாக காங்கிரஸ் ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி ஆராயும், சுயபரிசோதனை செய்து மீண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published: