காங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதில் தொடங்கி, ராஜஸ்தானில் கலகக்குரல் எழுப்பி வரும் சச்சின் பைலட் வரை இளம் தலைவர்கள் பலர் அக்கட்சியோடு முரண்படுவது தொடர்கதையாகி வருகிறது.

காங்கிரசில் இருந்து தொடர்ந்து வெளியேறும் இளம் தலைவர்கள்
சச்சின் பைலட் | ராகுல் காந்தி | சிந்தியா
  • News18
  • Last Updated: July 15, 2020, 9:41 PM IST
  • Share this:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 1996 ஆம் ஆண்டு முதல் 2004 வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.  2004ஆம் ஆண்டு இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தோடு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி சந்தித்த 2வது தேர்தல் அது.

முதல்முறையாக ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவரைப் போலவே சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, ஜித்தின் பிரசாதா, நவீன் ஜிண்டால் என காங்கிரசின் இளைஞர் படை முதல்முறையாக தேர்தல் களம் கண்டு வென்றது. 2002ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஜோதிராதித்யா சிந்தியா, 2004ல் மீண்டும் போட்டியிட்டு வென்றார். அப்போது பாஜகவை காங்கிரசின் இளைஞர் படை வென்றதாக பேசப்பட்டது.

16 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தற்போது காங்கிரசின் இளம் தலைவர்கள் வெளியேறி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றவுடன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை விட்டு ராகுல்காந்தி விலகினார்.


காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், ராகுல்காந்திக்கு நெருக்கமானவராகவும் பார்க்கப்பட்டவர் அசோக் தன்வார். ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த அசோக் தன்வார், 2019 அக்டோபரில் கட்சியில் இருந்து விலகினார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, கடந்த மார்ச் மாதம் காங்கிரசில் இருந்து தனது ஆதரவாளர்களோடு விலகி பாஜகவில் இணைந்தார்.  இதனால் அம்மாநிலத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவியேற்றார்.


படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வந்த சச்சின் பைலட், அக்கட்சியில் புயலை கிளப்பி வருகிறார்.

பிரதமர் மோடி மீண்டும் பொறுப்பேற்ற போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்டத்திருத்தம் என காங்கிரஸ் கட்சி போராட பல வாய்ப்புகள் வந்தன. தீவிரமான போராட்டங்கள் மூலம் அக்கட்சிக்கு புத்துயிரூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியில் இருந்து இளம் தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருவது கவனிக்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading