வடகிழக்கு மாநிலங்களிலேயே மிகப்பெரிய மாநிலமாக விளங்கும் அசாமில் 2வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது பாஜக. 2011 - 2016 வரை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்த முறை பாஜகவுடன் அசோம் கன பரிஷத், UPPL ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டன. காங்கிரஸ் 8 கட்சிகளுடன் சேர்ந்து பிரம்மாண்ட கூட்டணி அமைந்தது. கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த AIUDF இந்த முறை காங்கிரஸுடன் கை கோர்த்தது. அதே போல BPF, CPIM, RJD, CONG IND, CPIMLL, CPI ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்தன.
இந்நிலையில் இரவு 9 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு 64 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக மட்டும் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அசோம் கன பரிஷத் 9 இடங்களிலும், UPPL 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனியாக 29 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்றுள்ளது. AIUDF 16 இடங்களிலும், BPF 4 இடங்களிலும், சிபிஐஎம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
கடந்த 2016 தேர்தலில் பாஜக 60 இடங்களிலும், காங்கிரஸ் 26 இடங்களிலும், அசோம் கன பரிஷத் 14 இடங்களிலும், AIUDF 13 இடங்களிலும், BPF 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
தேர்தலில் தான் தோல்வி மன உறுதியை இழக்கவில்லை - காங்கிரஸ்
இதே போல 2011 தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும், அசோம் கன பரிஷத் 10, AIUDF 18, BPF 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Assam Assembly Election 2021, BJP, Congress