• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ராஜஸ்தான் தேர்தல்: பாஜகவை முந்திய காங்கிரஸ் கட்சி!

ராஜஸ்தான் தேர்தல்: பாஜகவை முந்திய காங்கிரஸ் கட்சி!

congress

congress

மொத்தம் உள்ள 6 ஜில்லா பரிஷத் அமைப்புகளில் 5ஐ காங்கிரஸ் கைப்பற்றுகிறது.

  • Share this:
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், சிரோஹி, சவாய் மாதோபூர், பரத்பூர் மற்றும் தவுசா ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 1,564 பஞ்சாயத்து சமிதி சீட்கள் மற்றும் 200 ஜில்லா பரிஷத் சீட்களுக்காகவும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 64% வாக்குப்பதிவு நடந்தது.

இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கியது. இதன் முடிவுகள் தற்போது ராஜஸ்தான் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பாஜகவை விட அதிக இடங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி, பாஜகவை விட அதிக எண்ணிக்கையில் சீட்களை பெற்றிருக்கிறது.

பஞ்சாயத்து சமிதி சீட்களை பொறுத்தவரையில் காங்கிரஸ் 670 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 551 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் சுயேட்சைகள் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றனர். 290 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி 40 இடங்களுடன் 4வது இடத்தையும், 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

Also Read:   தேசவிரோத செயல்: இன்போசிஸ் நிறுவனம் மீது ஆர்.எஸ்.எஸ் ஊடகம் பகீர் குற்றச்சாட்டு!

இதே போல 200 இடங்களுக்கான ஜில்லா பரிஷத் தேர்தலில், 99 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. 90 இடங்களில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

இதன் மூலம் மொத்தம் உள்ள 6 ஜில்லா பரிஷத் அமைப்புகளில் 5ஐ காங்கிரஸ் கைப்பற்றுகிறது.

பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை பறிகொடுத்திருக்கும் காங்கிரஸுக்கு ராஜஸ்தான் ஊராட்சித் தேர்தல் வெற்றி புதிய தெம்பை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான தனியார் அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி 2022ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தல்களில், 4 மாநிலங்களை பாஜக தக்க வைத்துக் கொள்ளும் எனவும் பஞ்சாபில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read:   600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!

2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸை விட அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த பாஜக கூடுதலான இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: