ஹோம் /நியூஸ் /இந்தியா /

இமாச்சல பிரதேசத்தில் முந்தும் காங்கிரஸ்.. பாஜகவின் பின்னடைவுக்கு அடுக்கப்படும் காரணங்கள்!

இமாச்சல பிரதேசத்தில் முந்தும் காங்கிரஸ்.. பாஜகவின் பின்னடைவுக்கு அடுக்கப்படும் காரணங்கள்!

காங்கிரஸ்

காங்கிரஸ்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் போட்டிக்கு இடையே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னிலை விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது.

இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 33 இடங்களில் முன்னிலை வகித்து காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. பாஜக 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதர வேட்பாளர்கள் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். பெரும்பாண்மைக்கு 34 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்கள் தேவை என்ற நிலையில், இமாச்சலப் பிரதேச முடிவுகள் கடும் போட்டிக்கு மத்தியில் நெருக்கமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சலத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சி அமைப்பது வழக்கம். முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி தற்போது நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றது. பாஜக 44 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த தேர்தலில் பாஜகவிற்கு 20 முதல் 25 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் சரிவிற்கு முக்கிய காரணம் முதலமைச்சராக இருந்த ஜெய்ராம் தாக்கூராக இருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அவர் மீது இருந்த அதிருப்தி  காரணமாகத்தான் இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல் களம் கண்டது பாஜக. அதுவே ஒரு பின்னடைவு தான். அனைத்து மாநிலங்களிலும் முதலமைச்சர் வேட்பளரை முன்னிறுத்தி பரப்புரை மேற்கொள்ளும் பாஜவின் இந்த தடுமாற்றம் வாக்காளர்களிடையே உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

பாஜக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான அதிருப்தியை வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பழைய ஓய்வூதிய திட்டம், பெண்களுக்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பரப்புரையை முன்னின்று நடத்தினார். அதேவேளை, பிரதமர் நரேந்திர மோடியை முகமாக முன்னிறுத்தி, இரட்டை இஞ்ஜின் அரசு என்ற கோஷத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வர பாஜகவும் தீவிர பரப்புரையை மேற்கொண்டது.

First published:

Tags: Congress, Himachal Pradesh