காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதில், மாநிலத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை விரிவான ஆலோசனை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதில், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க... மதிமுக - காங்கிரஸ் முற்றுகிறது மோதல்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.