• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பொதுஇடத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்.. தர்மசங்கடத்தில் கட்சித் தலைமை

பொதுஇடத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்.. தர்மசங்கடத்தில் கட்சித் தலைமை

Congress

Congress

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்களை கட்சி மேலிடம் கவனமாக கண்காணிக்க வேண்டும்

  • Share this:
காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக பொது இடத்தில் வைத்து சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் காங்கிரஸ் தலைமையை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் மாநில செயலாளர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ராய்பூரில் உள்ள கட்சித் தலைமையகமான ராஜீவ் பவனில் உள்ள வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்துவது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் அமர்ஜீத் சாவ்லா மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் சுஷில் சன்னி அகர்வாலுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மோகன் மார்க்கம் கட்சி அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்த நிலையில் அவருடைய காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்பதால் அங்கு தனது காரை நிறுத்தியிருந்த சுஷில் சன்னி அகர்வாலிடம் காரை எடுக்குமாறு கூறியிருக்கிறார் அமர்ஜீத் சாவ்லா, இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி, இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். மேலும் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். அந்த சமயம் மாநிலத் தலைவர் மோகன் மார்க்கம் மற்றும் செய்தியாளர்களும் இருந்துள்ளனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

Also read:  பாஜகவுக்கு சிக்னல் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்.. ரஜீப் பானர்ஜி அகர்தலாவில் இணைந்த ரகசியம்..

இதையடுத்து பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக முன்னாள் மாநிலச் செயலாளர் சுஷில் சன்னி அகர்வாலை இன்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது காங்கிரஸ். மேலும் அவரின் அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.



இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இது போல பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்களை கட்சி மேலிடம் கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Also read:   எங்களை அங்கீகரிக்காவிட்டால்… உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை!

முன்னதாக கடந்த வாரத்தில் ஜாஷ்பூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றின் போது அமைச்சர் டி.எஸ். சிங் தியோ குறித்து முன்னாள் மாவட்ட தலைவர் பவன் அகர்வால் பேசிக் கொண்டிருந்த போது அவரை பேசவிடாமல் தடுத்த கட்சி பிரமுகர் ஒருவர் தனது கைகளால் தள்ளிவிட்டதால் அந்த அரங்கமே பரபரப்படைந்தது. பின்னர் இரு தரப்பாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டு பரபரப்பாக காட்சியளித்தது.

கடந்த மாதம் பிலாஸ்பூரில் அமைச்சர் டி.எஸ்.சிங் தியோவின் ஆதரவாளர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை கண்டித்த எம்.எல்.ஏ ஒருவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: