CONGRESS LEADER WRITES TO SHARAD PAWAR AND TEJASHWI YADAV ASKING THEM NOT TO CAMPAIGN FOR TMC IN WEST BENGAL ARU
மமதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதீர்கள் - சரத் பவார், தேஜஸ்வி யாதவுக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!
திரிணாமுல் காங்கிரஸ்
மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இடம்பிடித்துள்ளது. அதே போல பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் இருந்து வருகிறது
மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரவேண்டாம் என்று சரத் பவார், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் மட்டுமின்றி மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் கனவையும் கலைக்கும் வகையில் கடினமான கட்டத்தில் களமிறங்கி உள்ளது. முதல்வர் மமதா பானர்ஜியின் இந்த இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு பிற மாநில பிரதான கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவை அறிவித்துள்ளன.
மாநில கட்சிகளின் இந்த அறிவிப்பு மேற்குவங்கத்தில் மூன்றாவது அணியாக விளங்கும் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இக்கட்சிகள் ஆதரவு அளிப்பதால் தங்கள் பிரச்சாரத்திற்கு பலனளிக்காமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இருந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரதீப் பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்ய வர வேண்டாம் என கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ் ஆகியோருக்கு பிரதீப் பட்டாச்சார்யா எழுதியுள்ள கடிதத்தில் நட்சத்திர பேச்சாளர்களாக உங்களின் வருகை வாக்காளரளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். திரிணாமுல் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்வதை தவிருங்கள் என எழுதியுள்ளார்.
மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் இடம்பிடித்துள்ளது. அதே போல பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.