ஹோம் /நியூஸ் /இந்தியா /

விவசாயிகளுக்காகத்தான் புதிய வேளாண் சட்டம் என்றால் விவாதிக்காமல் நிறைவேற்றியது ஏன்...? ராகுல் காந்தி

விவசாயிகளுக்காகத்தான் புதிய வேளாண் சட்டம் என்றால் விவாதிக்காமல் நிறைவேற்றியது ஏன்...? ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாப்பில் வேளாண் துறையை பாதுகாப்போம் என்ற பெயரில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துகின்றனர். இதனை தொடங்கிவைத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோகா மாவட்டத்தில் பத்னி கலான் பகுதியிலிருந்து ஜாத்புரா வரை டிராக்டரில் பேரணி சென்றார். அவருடன், டிராக்டரில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகர் ஆகியோரும் சென்றனர்.

  முன்னதாக பத்னி கலான் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்காகவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறும் பிரதமர், நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டின் மூன்று தூண்களாக குறைந்தபட்ச ஆதார விலை, உணவு கொள்முதல், ஒட்டுமொத்த சந்தை ஆகியவை இருப்பதாகவும், இந்த அமைப்பை அழிக்க பிரதமர் மோடி விரும்புவதாகவும் அவர் விமர்சித்தார்.

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார். மூன்று நாட்களுக்கு நடைபெறும் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Sankar
  First published:

  Tags: Rahul gandhi