பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு செல்லும் ராகுல் காந்தி

குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு செல்லும் ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: February 14, 2019, 11:55 AM IST
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இன்று பிற்பகல் அவர் உரையாற்றுகிறார். 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபைத் தேர்தலின் போது பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி அங்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்று முதல் முறையாக குஜராத் செல்கிறார். அங்கு அவர் தனது முதல்கட்ட பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மேலும் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் இன்று அவர் ஆலோசனை நடத்துகிறார்.


ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி 1980-ம் ஆண்டும் தந்தை ராஜீவ் காந்தி 1984-ம் ஆண்டும், தாய் சோனியா காந்தி 2004-ம் ஆண்டும் அவர்களது தேர்தல் பிரச்சாரத்தை இங்குதான் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... மோடியின் 5 ஆண்டு சாதனைப் பட்டியல்...அசந்துடுவீங்க 
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்