அமேதி தொகுதியில் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!

தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுசெயலாளருமான பிரியங்கா காந்தி, தாயார் சோனியாகாந்தியுடன் சென்று ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

Vaijayanthi S | news18
Updated: April 10, 2019, 9:54 AM IST
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்!
ராகுல் காந்தி
Vaijayanthi S | news18
Updated: April 10, 2019, 9:54 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுவதாக ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி கடந்த வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார்.

Also read... ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!

தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, தாயார் சோனியாகாந்தியுடன் சென்று ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

இதற்காக கெளரிகஞ்ச் பகுதியில் பிரம்மாண்ட பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் இரண்டாவது முறையாக ஸ்மிர்தி இராணி களமிறக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...