Home /News /national /

யாருக்கும் எதுவும் இல்லை.. பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

யாருக்கும் எதுவும் இல்லை.. பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மத்திய அரசின் பட்ஜெட்டை ஜிரோ பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்

    2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதனை மோடி அரசின் ஜிரோ பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. டிஜிட்டல் கரன்சி,  வேலைவாய்ப்பு, நதிநீர் இணைப்பு, சாலை வசதி , விவசாயம், கல்வி , டிஜிட்டல் பேங்கின், ஏழை மக்களுக்கு வீடு, 5ஜி சேவை உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

    அதேவேளையில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இது அவர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பட்ஜெட் 2022: தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை..


    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை ஜிரோ பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசாங்கத்தின் ஜிரோ பட்ஜெட்.  மாத சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள்மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: MODI GOVERNMENT, Rahul gandhi, Union Budget 2022

    அடுத்த செய்தி