• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு இதுதான் காரணம்' : சிதம்பரம் விமர்சனம் - பாஜக பதிலடி

'பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு இதுதான் காரணம்' : சிதம்பரம் விமர்சனம் - பாஜக பதிலடி

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது

பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது

மத்திய அரசின் வேண்டுகோளைத் தொடர்ந்து பாஜக ஆளும் 10 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

  • Last Updated :
  • Share this:
    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதனை விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பாஜக அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ. 5 மற்றும் ரூ. 10 குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும், மாநில அரசுகள் தங்களுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, இன்று முதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 91.43-க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு மேற்கொண்ட விலைக்குறைப்பு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

    சமீபத்தில் நடைபெற்ற 30 சட்டமன்ற மற்றும் 3 மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதுதான் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு காரணம். இந்த நடவடிக்கை மூலம், அதிகப்படியான வரி விதிப்புதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அந்த அதிகப்படியான வரி விதிப்புக்கு மத்திய அரசின் பேராசையே காரணம் என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம். இடைத்தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் அதிகமாகும்.

    இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார். அவரது இந்தப் பதிவை பலரும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மக்களின் கோரிக்கையை உணர்ந்து, அவர்களின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக எங்களை என்ன விமர்சித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் எப்போதும் பங்கெடுக்கும்' என்று கூறியுள்ளார்.

    மத்திய அரசின் வேண்டுகோளைத் தொடர்ந்து பாஜக ஆளும் 10 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. இதனால் அங்கு மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்த 10 மாநிலங்களில், கோவா, இமாசல பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: