முகப்பு /செய்தி /இந்தியா / "3 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது" - மல்லிகார்ஜுன கார்கே

"3 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது" - மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

மல்லிகார்ஜுன கார்கே

இது சிறிய மாநிலங்களின் தேர்தல். இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுவாக வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மூன்று மாநில சட்டபேரவைத் தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மூன்று மாநில சட்டபேரவை தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார். திரிபுரா, மேகலாயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டதாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசுகையில், இது சிறிய மாநிலங்களின் தேர்தல். இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுவாக வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால், ஏராளமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முன் வந்துள்ளனர். மதசார்பற்ற கட்சியை ஆதரிப்பார்கள். அவர்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை ஆதரிப்பார்கள். இத்தகைய தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்." என்றும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Mallikarjun Kharge