ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராஜராஜ சோழன் இந்துதான்.. கமல் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பதிலடி

ராஜராஜ சோழன் இந்துதான்.. கமல் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பதிலடி

கமல்ஹாசனுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் கண்டனம்

கமல்ஹாசனுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கரண் சிங் கண்டனம்

ராஜராஜ சோழன் இந்து அல்ல என்ற கமலஹாசன் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவக் கரண் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவல் திரைவடிவம் பெற்று கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்து வசூல் அள்ளி குவித்து வரும் அதேவேளையில், அதை ஒட்டிய சர்ச்சைகளும் ஒரு வாரகாலமாக வலம் வருகிறது. சோழர் வரலாற்று கால திரைப்பட்டமான பொன்னியின் செல்வன், ராஜராஜ சோழன் மன்னராவதற்கு முன்தைய கால சூழலை விளக்குகிறது. இந்நிலையில், சமீபத்திய விழா ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜன் இந்து அல்ல, அவரது அடையாளங்கள் தற்போது மாற்றப்படுகிறது என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

  இந்த கருத்து கடும் விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்திய நிலையில், இந்த கருத்து சரிதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பாஜக பிரமுகர்கள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

  தொடர்ந்து பொன்னியன் செல்வன் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமலஹாசனும் ராஜராஜன் காலத்தில் இந்து என்ற பெயர் இல்லை என்பதால் வெற்றிமாறன் கூறிய கருத்து சரிதான் என்றார். கமலஹாசனின் கருத்துக்குப் பின் தேசிய அளவில் இந்த விவகாரம் விவாதமாகியுள்ளது.

  இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கரண் சிங், கமலஹாசனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "கமலஹாசனின் கருத்து அர்த்தமற்ற ஒன்று. சிவன் ஆதி காலத்தில் இருந்த இந்து கடவுள். ஸ்ரீநகர் தொடங்கி ராமேஸ்வரம் வரை அவரை மக்கள் வழிபடுகின்றனர். தஞ்சை பெரிய கோயில் என்ற பிரம்மாண்டத்தை கட்டிய ராஜராஜ சோழன் இந்து தான்.

  இதையும் படிங்க: வர்ணமும் ஜாதியும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

  சைவர்களை இந்துக்கள் இல்லை என்பது, இவர் கத்தோலிக்கர் ஆனால் கிறித்துவர் அல்லர் என்பதை போன்றது. எனவே, இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம் என பிரிவினையை உருவாக்க வேண்டாம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Congress, Hindu, Kamal Haasan, Raja Raja Chozhan, Vetrimaran