காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதின் பிரசாதா, அவரது சகோதரியின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இன்று, 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிதின் பிரசாதா, ‘உத்தரப்பிரதேச மாநிலம் தவுர்ஹரா மக்களவைத் தொகுதியில் அவரது சகோதரியின் வாக்கு, கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘என்னுடைய சகோதரி வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது, அவர் பெயரில் ஏற்கெனவே வாக்குப் பதிவாகியுள்ளது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்படிதான் கள்ள ஓட்டுகள் போடப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தெரிவித்த தேர்தல் அதிகாரி அம்ரிட் திரிபதி, ‘வாக்குச் சாவடியில் இருந்த ஊழியர் தவறுதலாக, ஜிதின் பிரசதா சகோதரி வாக்குப்பதிவு செய்ததாக குறித்துவிட்டார். பிரசாதவின் சகோதரி மீண்டும் வந்தால் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விரேந்திர மதன், ‘ஜிதின் பிரசாதா சகோதரி விவகாரம் வெளியே தெரிந்துள்ளது. ஆனால், வாக்குப்பதிவு செய்ய வந்த பலருடைய வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.