ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராகுல்காந்தி ஷூ லேஸ் கட்டிவிட சொன்னாரா? உண்மையை ஆதாரத்துடன் விளக்கிய முன்னாள் அமைச்சர்

ராகுல்காந்தி ஷூ லேஸ் கட்டிவிட சொன்னாரா? உண்மையை ஆதாரத்துடன் விளக்கிய முன்னாள் அமைச்சர்

ராகுல் யாத்திரை வீடியோ

ராகுல் யாத்திரை வீடியோ

ராகுல் காந்தி நடைபயணத்தில் ஷூ லேஸ் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு முன்னாள் அமைச்சர் ஜிதேந்திரா வீடியோ ஆதரத்துடன் உண்மையை விளக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 100 நாள்களை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தொடங்கிய யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயணம் நிறைவடைந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற யாத்திரையின் போது முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முன்னணி தலைவருமான ஜிதேந்திர சிங் அல்வார் ராகுல் காந்தியுடன் பங்கேற்றார். நடைபயணத்தின் போது ராகுல் காந்தியின் ஷூவின் லேஸ்கள் அவிழ்ந்துவிட்டதாகவும், முன்னாள் அமைச்சர் ஜிதேந்திராவை அழைத்து ராகுல் தனது ஷூ லேஸ்களை கட்டி விட வைத்ததாகவும் செய்திகளும் வீடியோக்களும் பரவின.

வைரலாகப் பரவிய அந்த காணொலியில் ராகுல் ஜிதேந்திரா ஆகியோருக்கு முன்னாள் ஒரு நபர் நின்றுகொண்டு ஷூ லேஸ் கட்டுவதை மறைக்கும் விதமாக வீடியோ இருந்தது. இந்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பாஜகவினர், ராகுல் காந்தி தனது கட்சியின் மூத்த தலைவரை ஷூ லேஸ்களை கட்டிவிட வைத்து மோசமாக நடத்துகிறார் என குற்றஞ்சாட்டி கண்டித்து பதிவுகளை போட்டனர். இந்நிலையில், பாஜகவினர் புகார்கள் உண்மைக்கு புறம்பானவை, அங்கு நடந்த சம்பவமே வேறு என முன்னாள் அமைச்சர் ஜிதேந்திரா சிங் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ. 92,570 கோடி அபேஸ்.. கடன் வாங்கி ஏமாற்றிய 50 பேர்.. பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

நடைப்பயணத்தின் போது ஜிதேந்திராவின் ஷூ லேஸ்கள் தான் அவிழ்ந்திருந்த நிலையில், அதை கவனித்த ராகுல் காந்தி  ஜிதேந்திராவை அழைத்து சரி செய்ய சொன்னார். எனவே, எனது ஷூ லேஸை தான் நான் கட்டினேன் என வீடியோ ஆதாரத்துடன் ஜிதேந்திரா உண்மையை விளக்கி கூறியுள்ளார்.

மேலும், பாஜகவினர் பொய் செய்திகள் பரப்பினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என ஜிதேந்திரா சிங்கும், காங்கிரஸ் கட்சியினரும் எச்சரித்துள்ளனர்.

First published:

Tags: BJP, Rahul gandhi, Viral Video