Home /News /national /

ராகுல் காந்தியின் தலைமையை மறைமுகமாக வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள்

ராகுல் காந்தியின் தலைமையை மறைமுகமாக வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்ற கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மறைமுகமாக வலியுறுத்திவருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் என்ற புத்தகத்திற்காக பேட்டி அளித்தார். அதில், நேரு குடும்பத்தைச் சாராதவர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வரவேண்டும். அதனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, காங்கிரஸ் தொண்டர்களிடம் களக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில், ‘2009-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது பிரதமர் பதவியிலிருந்து ராஜீனாமா செய்வதற்கு மன்மோகன் சிங் முன்வந்தார்.



    ஆனால், ராகுல் காந்தி அதனை மறுத்துவிட்டார். ராகுல் காந்தி எப்போதும் தலைமைப் பதவிக்காக காத்திருந்ததில்லை. ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வேண்டும் என்று விரும்புகின்றனர். கட்சிக்கு யார் தலைவராக வருவார்கள் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிதான் முடிவு செய்யும்’ என்று தெரிவித்தார்.

    நேரு குடும்பத்தை சாராதவரே காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் - பிரியங்கா காந்தி


    இந்த விவகாரம் குறித்த ரன்தீப் சிங் சுர்ஜீவாலா ட்விட்டர் பதிவில், ‘பிரியங்கா காந்தியின் ஒருவருட பழைய கருத்தின்மீது ஊடகங்கள் தற்போது கவனம் செலுத்துவதை நான் பாராட்டுகிறேன். நேரு குடும்பம் அதிகாரத்தின் மீது ஆசைப்படாமல் கட்சிக்காக உழைத்துள்ளார்கள். மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து போராடிவருகிறார்.



    அவரது துணிச்சலையும், அச்சமில்லா நிலையையும் தொண்டர்களுக்கு வெளிப்படுத்திவருகிறார். ராகுல் காந்தியின் தொடர் போராட்டங்களை லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் பார்த்துவருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு சமரசமில்லாத துணிச்சலும், அச்சமில்லாத நிலையும்தான் தற்போது தேவை’ என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Rahul gandhi

    அடுத்த செய்தி